தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் 7 லட்சம் பேர் சொந்த ஊருக்குப் பயணம்: சென்னையில் இருந்து 70 ஆயிரம் பேர் சென்றனர்
தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் இருந்து 7 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க இன்றுமுதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து, வெளியூர்களில் தங்கியுள்ளவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கடந்த 2 நாட்களாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. அவற்றில் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TdtOyx
via
No comments