“என் தங்கையின் கணவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார்” - நடிகர் பால சரவணன்
தன்னுடைய தங்கையின் கணவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துவிட்டதாக நடிகர் பால சரவணன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒரு நாளைக்கு 3 லட்சம் பேருக்குமேல் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேருக்கு மேல் இறக்கிறார்கள். தினந்தோறும் பல பிரபலங்களும் இறந்து வருகிறார்கள். ஏற்கனவே, கொரோனா பாதிப்பால் இயக்குநர் கே.வி ஆனந்த், நடிகர் பாண்டு உள்ளிடோர் இறந்துள்ளனர். இந்நிலையில், தன்னுடைய தங்கையின் கணவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துவிட்டதாக நடிகர் பால சரவணன் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்க்கத்தில், “அன்பு நண்பர்களே...இன்று எனது தங்கையின் கணவர் கொரோனா காரணமாக இறந்துவிட்டார்...32வயது... தயவு கூர்ந்து மிக கவனமாக இருக்கவும்...நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்...நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும்...முக கவசம் அணிவீர்” என்று இத்தகவலை தெரிவித்துள்ளதோடு முகக்கவசம் அணியவும் வலியுறுத்தியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3trUYhm
No comments