Breaking News

வீட்டில் இருந்தே அலுவல் பணியைத் தொடர்ந்த முதல்வர் ரங்கசாமி நாளை சட்டப்பேரவை செல்கிறார்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நலமடைந்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, வீட்டில் தன்னைதனிமைப்படுத்திக் கொண்டு அலுவல் பணியைமேற்கொண்டிருந்தார். தற்போது உடல் நலம் சீரடைந்துள்ள நிலையில் நாளை முதல் சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கு அவர் செல்கிறார்.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி 16 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றது. ரங்கசாமி கடந்த 7-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், பேரவைத் தலைவர், எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு நிகழ்வுகள் நடைபெறவில்லை. இதனிடையே, என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ லட்சுமிநாராயணனை, தற்காலிகபேரவைத் தலைவராக நியமனம் செய்வதற்கு ஆளுநருக்கு முதல்வர் ரங்கசாமி பரிந்துரை செய்திருந்தார். 10 நாட்களுக்கு முன் அனுப்பிய கோப்புக்கு ஆளுநர் அனுமதி தராமல் வைத்திருந்த நிலையில் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்திருந்தார். சட்டப்பேரவைச் செயலர் முனிசாமி அதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bKgesY
via

No comments