தடுப்பூசி முகாம்களை அதிகரிக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்
விருதுநகர் மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்களை அதிகரிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தினார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே எம்.ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கை வசதிகளுடன்கூடிய கரோனா சிகிச்சை மையத்தை, மாவட்ட ஆட்சியர் இரா. கண்ணன் முன்னிலையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்துவைத்தார். பின்னர் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hO7oy2
via
No comments