ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் கரோனா தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஓராண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விருப்பம் மற்றும் கல்வித்தகுதி உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை புதன்கிழமை (இன்று) இரவு 8 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மருத்துவர்கள் https://ift.tt/3vqyAH5 என்ற இணையதளத்திலும், செவிலியர்கள் https://ift.tt/3yxdsRo என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oP7VkN
via
No comments