Breaking News

காட்டு யானையை துன்புறுத்திய இளைஞர்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்டு திருமூர்த்திமலை, ஈசல் தட்டு, குழிப்பட்டி, குருமலை, மாவடப்பு, கோடந்தூர் உள்ளிட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. திருமூர்த்திமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானையை, அப்பகுதி இளைஞர்கள் கற்களால் தாக்கியும், மரக்கட்டையை எறிந்தும் விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிகழ்வுகளை சிலர் வீடியோவாக எடுத்து பரப்பியுள்ளனர். வலி தாங்க முடியாத யானை பிளிறியபடி, மக்களையும் துரத்துவதைப்போல காட்சிகள் பதிவாகியிருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vIoq4m
via

No comments