சென்னையை போல் மாறுகிறதா மதுரை? - `ஆக்ஸிஜன் படுக்கை' கிடைக்காமல் நோயாளிகள் தவிப்பு: அரசின் கவனத்துக்கு மாவட்ட நிர்வாகம் கொண்டு செல்ல எதிர்பார்ப்பு
சென்னையைப் போல் மதுரையிலும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் `ஆக்ஸிஜன் படுக்கை'கள் கிடைக்காமல் கரோனா நோயாளிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் செயல்படும் கரோனா சிகிச்சை மையம். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி மதுரை மாவட்டத்தில் தற்போது 4,500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 16 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பிற மாவட்டங்களில் பரிந்துரைக் கப்பட்ட நோயாளிகள் 374 பேர் கூடுதலாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RuCIHa
via
No comments