"ஜடேஜாவால் இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினமாக இருக்கிறது" அக்டர் படேல்!
அண்மைக் காலமாக ஜடேஜா சிறப்பாக விளையாடுவதால் மற்ற சுழற்பந்துவீச்சாளர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது சிரமமாக இருப்பதாக இந்திய வீரர் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு பேசிய அவர் "என்னுடைய திறமை மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஒருநாள் போட்டிகளில் காயம் காரணமாக இந்திய அணிக்காக விளையாட முடியாமல் போனது. டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினும், ஜடேஜாவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அதுவும் அண்மைக் காலமாக ஜடேஜா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் இன்னொரு இடக்கை சுழற்பந்துவீச்சாளருக்கு அணியில் இடம் கிடைப்பது சிரமமாக இருக்கிறது" என்றார்.
மேலும் "இந்திய டெஸ்ட் அணிக்காக குல்தீப் யாதவும், சஹால் ஆகியோரும் சிறப்பாக விளைாடினார்கள். அணியில் சில நேரம் காம்பினேஷன்கள் மாற்றப்படுவதால், நமக்கான வாய்ப்பு வரும் வரை காத்திருக்கு்ம் சூழல் ஏற்படுகிறது. எனக்கான வாய்ப்பு வரும்போது அதை நிரூபிக்கும் வகையில் விளையாடுவேன். அப்படிதான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி விளையாடினேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அக்ஸர் படேல் "நானும் ஜடேஜாவும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் சிஎஸ்கேவுக்காக ஒன்றாக விளையாடி இருக்கிறோம். ஜடேஜா இருக்கும் இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும். டெஸ்ட் போட்டிகளில் சில நேரங்களில் எதிரணி பேட்ஸ்மேன்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிக்கொண்டு இருப்பார்கள். அப்போது அணியினரை சோர்வின்றி வைத்துக்கொள்ள ஜடேஜா நகைச்சுவைகள் கூறுவார். இதனால் ஒட்டுமொத்த அணியும் உற்சாகமாக இருக்கும்" என்றார் அவர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3i3uHDY
via
No comments