விஐடி பல்கலை பொறியியல் நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு : மாணவர் சேர்க்கை வரும் 21-ம் தேதி தொடக்கம்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவு வெளியான நிலையில் மாணவர் சேர்க்கை வரும் 21-ம் தேதி தொடங்கி ஜூலை 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 2021-22 நடப்பு கல்வி ஆண்டில் பி.டெக் பொறியியல் பட்டப் படிப்பில் சேர்வதற்கான சேர்க்கை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்தியாவின் 31 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசம், துபாய், குவைத், மஸ்கட், கத்தார், பஹரைன், சிங்கப்பூர், மொரீசியஸ் உட்பட 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மாணவர்கள் தேர்வு எழுதினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iDBJj6
via
No comments