Breaking News

சென்னையில் 32 வழக்குகளில் தேடப்படும் பிரபல ரவுடி சி.டி.மணியை பிடிக்கும்போது சென்னையில் துப்பாக்கி சூடு: உதவி ஆய்வாளர் காயம்; ரவுடியின் கை, கால் முறிந்தது

பிரபல ரவுடி சி.டி. மணியை போலீஸார் பிடிக்கும்போது, ரவுடி துப்பாக்கியால் சுட்டதில் காவல் உதவி ஆய்வாளர் காயமடைந்தார். போலீஸாரிடமிருந்து தப்பி ஓட பாலத்தில் இருந்து குதித்த ரவுடியின் கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தாமஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சி.டி.மணி என்ற மணிகண்டன் (38). இவர் மீது 10 கொலை வழக்குகள் உட்பட 32 வழக்குகள் உள்ளன. 3 முறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3icj8KU
via

No comments