தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு 6 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நன்கொடை வழங்கிய எல் அண்ட் டி
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கரோனா நெருக்கடிகளை எதிர்கொள்ள பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் எல் அண்ட் டி நிறுவனம் தமிழகத்துக்கு 6 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் வழங்க முன்வந்துள்ளது.
500 எல்பிஎம் திறன் கொண்ட முதல் ஆலையை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. மேலும் 5 ஆக்சிஜன் ஆலைகளை தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uZKmXV
via
No comments