முதுமலை, டாப்சிலிப் முகாம்களில் வளர்ப்பு யானைகளுக்கு கரோனா பரிசோதனை: வனத் துறை அமைச்சர் உத்தரவு
தமிழகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாம்களில் அனைத்துயானைகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
உதகையில் நேற்று அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 13 ஆசிய சிங்கங்களுக்கு கரோனா அறிகுறிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சில சிங்கங்களுக்கு அறிகுறிகள் தென்பட்ட நிலையில், நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் உயிரிழந்தது. இதேபோன்ற நிகழ்வுகள் ஹைதராபாத், ஜெய்ப்பூர், உத்தரப்பிரதேச மாநிலம் இட்டாவா ஆகிய இடங்களில் உள்ள ஆசிய சிங்கங்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34NR6h0
via
No comments