தந்தையை போலவே நீதிபதி சுப்பையாவும் முன்மாதிரி தீர்ப்புகளை வழங்கியுள்ளார்: பிரிவு உபச்சார விழாவில் தலைமை வழக்கறிஞர் புகழாரம்

தனது தந்தையைப் போலவே நீதிபதி ஆர்.சுப்பையாவும் பலசிறப்புமிக்க முன்மாதிரி தீர்ப்புகளை வழங்கியுள்ளார் என அரசுதலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் புகழாரம் சூட்டினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ஆர்.சுப்பையா, பணி ஓய்வு பெற்றதையடுத்து தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மூத்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம், எம்.துரைசாமி, டி.ராஜா, பி.என்.பிரகாஷ் உள்ளிட்ட சக நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, உயர் நீதிமன்ற மதுரை கிளை அரசு மூத்த வழக்கறிஞர் வீர கதிரவன், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், மெட்ராஸ் பார் அசோசியேஷன் அட்ஹாக் கமிட்டி தலைவர் ரங்கபாஷ்யம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qjum2o
via
No comments