பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ரோஜர் பெடரர் விலகல்: ரசிகர்கள் அதிர்ச்சி
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக முன்னணி வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 20 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் ரோஜர் பெடரர். 39 வயதான பெடரர் கடந்த சில வருடங்களாக காயம் காரணமாக தொடர்ச்சியாக விளையாட முடியாத நிலையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் உடல் நலத்தை கருத்தில் கொண்டு பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ரோஜர் பெடரர் கூறுகையில் ‘‘எனது அணியுடனான ஆலோசனைக்குப் பிறகு பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகுவதாக இன்று முடிவெடுத்துள்ளேன். இரண்டு முறை மூட்டு அறுவை சிகிச்சை செய்த பிறகு, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காயத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், என்னுடைய உடல்நலம் குறித்து கவனிப்பது முக்கியமானது. காயம் குணமடைவதற்காக எனக்கு நானே அவசரப்படுத்திக் கொள்ள மாட்டேன் என்பதை உறுதி செய்வதும் முக்கியமானது’’ என்றார்.
— Roger Federer (@rogerfederer) June 6, 2021
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3fT5yKR
via
No comments