Breaking News

அத்தியாவசிய தேவையின்றி சுற்றியதால் காரை பறிமுதல் செய்ய முயன்றபோது போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞர்: சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ; 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு

சேத்துப்பட்டில் அத்தியாவசிய தேவையின்றி சுற்றியதால் காரை பறிமுதல் செய்ய முயன்றபோது, போக்குவரத்து போலீஸாரிடம் பெண் வழக்கறிஞர் ஒருவர் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக சேத்துப்பட்டு போலீஸார் தொடர்புடைய பெண் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்றும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதையடுத்து அத்தியாவசிய தேவையின்றி சுற்றித் திரிந்தவர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதன்படி, நேற்று காலை சேத்துப்பட்டு சிக்னலில் சேத்துப்பட்டு போக்குவரத்து தலைமைக் காவலர்கள் ஆனந்த், பிரபாகரன், ரஞ்சித் குமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cnxDYC
via

No comments