பூட்டியே கிடக்கும் மகளிர் குழு கட்டிடங்கள்: சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

தமிழகத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மாநில அரசின் பெண்கள் மேம்பாட்டுக் கழகம்மூலம் முதன்முதலில், 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மகளிர் சுயசார்பு பெற உதவியதால் இக்குழுக்கள் மிக வேகமாக அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டன.
தமிழகத்தில் கடந்த, 2009-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 59 லட்சம் குழுக்கள் இயங்கி வந்தன. தற்போது இந்த எண்ணிக்கை, சுமார் 3 லட்சமாக உள்ளது. மகளிர் குழுக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது. அவற்றில் முக்கியமானது, சுய தொழில் செய்யும் குழுக்களுக்கு உதவியாக, ஊராட்சி பகுதியில் பயிற்சி மற்றும் பணிமனை கூடங்கள் அமைத்து தரப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35hp4dP
via
No comments