கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ.37 லட்சம் மதிப்பில் 50 மடிக்கணினிகள்: தாம்பரம் கோட்டாட்சியர் வழங்கினார்

தாம்பரம் கோட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ. 37.50 லட்சம் மதிப்புள்ள 50 மடிக்கணினிகளை கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
வருவாய்த் துறையால் வழங்கப்படும் ஜாதி, வருவாய், இருப்பிடம்,வாரிசு, முதல் தலைமுறை பட்டதாரி உள்ளிட்ட அனைத்து வகைசான்றிதழ்கள், பட்டா மாறுதல்,பட்டா உட்பிரிவு செய்தல் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து இணையவழியில் பெறப்படுகின்றன. இதனால் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக, மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gx2OBR
via
No comments