கட்சி மறுகட்டமைப்பு: நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

கடந்த சட்டப்பேரவை தேர்தலில், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். தொடர்ந்து, கட்சியின் துணைத் தலைவர், பொதுச் செயலாளர்கள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இருப்பினும், இதுவரை கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், தலைவர் கமல்ஹாசன் மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து கட்சியில் நிலவும் தற்போதைய சூழல், கட்சியை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொருவரையும் தனித்தனியாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UmEETt
via
No comments