தமிழகத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.40 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கப்படும்: நபார்டு வங்கித் தலைவர் சிந்தாலா தகவல்

தமிழகத்துக்கு நடப்பு நிதியாண்டில் நபார்டு வங்கியின் நிதியுதவி ரூ.40 ஆயிரம் கோடியாக இருக்கும் என அவ்வங்கியின் தலைவர் சிந்தாலா தெரிவித்துள்ளார்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு) தலைவர் டாக்டர் ஜி.ஆர்.சிந்தாலா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இரு தினங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.3 ஆயிரம் கோடிவரை உதவி, நபார்டு உள்கட்டமைப்பு நிதியின் கீழ் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாடு, மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி,பால்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, நபார்டு வங்கி மூலம் அளிக்கப்படும் நிதி உதவிகள் குறித்து விவாதித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qbrR1O
via
No comments