Breaking News

சர்வாதிகாரமாக நடக்கின்றன சமூக வலைதள நிறுவனங்கள்: ‘சோஹோ’ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சிறப்புப் பேட்டி

சமூக வலைதள நிறுவனங்கள், ஓடிடி தளங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ‘புதிய ஒழுங்குமுறை விதிகள்’ கடும் சர்ச்சையாகி உள்ளன. அவ்விதிகளை எதிர்த்து வாட்ஸ்அப், கூகுள் போன்ற நிறுவனங்கள் நீதிமன்றம் சென்றுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாகவும், கரோனா சூழல் காரணமாககடந்த ஓராண்டு காலமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருப்பது, தொழில் நிறுவனங்களின் இயங்குமுறை பெரும் மாறுதலுக்கு உள்ளாகியிருப்பது ஆகியவை தொடர்பாகவும் ‘சோஹோ’ நிறுவனத்தின் நிறுவனரும், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான ஸ்ரீதர் வேம்பு உடன் உரையாடியதிலிருந்து...

தற்போது எழுந்திருக்கும் பிரச்சினை, வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற நிறுவனங்களின் தகவல் பாதுகாப்புக் கொள்கை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, மக்களின் அந்தரங்கம் சம்பந்தப்பட்டதும் கூட! தனி மனிதரின் அந்தரங்கத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தும் விதியை நாம்நிறுவனங்களின் விதிகளாக குறுக்கி, நிறுவனங்கள் அரசின் விதிக்கு கட்டுப்பட்டுதான் நடக்கவேண்டும் என்று கூறுவது சரியா? இது மக்களின்உரிமை சார்ந்த பிரச்சினையும் இல்லையா?



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RsmJcW
via

No comments