Breaking News

அமைச்சரவை அமைவதில் தொடரும் இழுபறி: புதுச்சேரியில் என்.ஆர்.காங். - பாஜக இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதி

புதுச்சேரியில் புதிய அரசின் அமைச்சரவை உருவாவதில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே உடன்பாடு எட்டப்படாததால், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. ‘அமைச்சரவைப் பற்றி அழைத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை’ என பாஜக முடிவு எடுத்துள்ளது. ‘பேச்சுவார்த்தைக்கு தயார்’ என்று என்.ஆர்.காங்கிரஸ் அறிவித் துள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வென்று ஒரு மாதம் ஆன நிலையில், முதல்வராக ரங்கசாமி மட்டுமே பொறுப்பு ஏற்றுள்ளார். கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக துணை முதல்வர் உள்ளிட்ட 3 அமைச்சர் பதவிகள் மற்றும் சபாநாயகர் பதவிகளை கேட்டு வருகிறது. என்.ஆர்.காங். தரப்பில் இரு அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவி தருவதாக கூறப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3g2PcOH
via

No comments