சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; பாஜக பிரமுகர் மீது புகார் அளித்தவருக்கு கத்திக்குத்து: 2 மகன்கள் உட்பட 5 பேர் கைது

குத்தாலம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக பிரமுகர் மீது போலீஸில் புகார் அளித்த சிறுமியின் தந்தை உட்பட 2 பேர் கத்தியால் குத்தப்பட்டனர். இதுதொடர்பாக, பாஜகபிரமுகரின் 2 மகன்கள் உட்பட 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த கோழிகுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம்(60). பாஜகவின் மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய பொதுச்செயலாளரான இவர், 7 சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச புகைப்படங்களை காட்டி பாலியல் தொல்லை அளித்து மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UQynQe
via
No comments