Breaking News

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டி: பாகிஸ்தான் வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாட்டிங்காமில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் 49 பந்துகளில் 85 ரன்களும், முகமத் ரிஸ்வான் 63 ரன்களும் எடுத்தனர். கடின இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது.

image

எனினும் லியாம் லிவிங்ஸ்டோன் 43 பந்துகளில் 103 ரன்கள் விளாசினார். முடிவில் இங்கிலாந்து அணி 201 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3euNQwi
via

No comments