நாடு முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுகிய தூர ரயில்களின் சேவை தொடங்குவது எப்போது?

நாடு முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்பதிவு இல்லாத குறுகிய தூர பயணிகள் ரயில்களின் சேவை மீண்டும் தொடங்குவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
இந்திய ரயில்வேயில் இயக்கப்பட்டு வந்த 13,349 பயணிகள் ரயில்களில் தினமும் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம்செய்தனர். இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்க, வழக்கமான பயணிகள் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வால், பல முக்கிய வழித்தடங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wLkhwG
via
No comments