தாம்பரம் - கூடுவாஞ்சேரி 3-வது பாதையில் அடுத்த மாதம் முதல் ரயில் சேவை தொடக்கம்: பணிகள் நிறைவடைந்ததாக ரயில்வே அதிகாரிகள் தகவல்
தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே 3-வது புதிய பாதையில் அடுத்த மாதம் முதல் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் தினமும் 280 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், 170 ரயில் சேவைகள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. மாநகரின் எல்லைப் பகுதிகள் விரிவடைந்துள்ளதால், மின்சார ரயில்களை செங்கல்பட்டு வரை அதிகரித்து இயக்கும் வகையில், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சுமார் 30 கி.மீ தூரத்துக்கு 3-வது பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2V5rDxT
via
No comments