தெலுங்கு படத்தில் லிங்குசாமியுடன் இணையும் நடிகர் ஆதி: ரூ. 4 கோடி சம்பளம்
லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் தெலுங்கு படத்தில், நடிக்க நடிகர் ஆதிக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழில் மிருகம், ஈரம், யாகவராயினும் நாகாக்க உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் ஆதி. அதேபோல் தெலுங்கிலும் சில படங்களில் நாயகனாகவும் வில்லனாகவும் நடித்து இருக்கிறார். இவர் தற்போது லிங்குசாமி தெலுங்கில் இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்காக அவருக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. ஆதி ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படும் நிலையில், வில்லனாக நடிக்கும் படத்திற்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளதை திரைத்துறையில் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3iouz0t
No comments