Breaking News

பிரம்மாண்டமாக டிஜிட்டலில் வெளியாகும் அஜித்தின் ‘காதல் கோட்டை’

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த 10 காதல் படங்களை பட்டியலிட்டால் அஜித்தின் ’காதல் கோட்டை’ படத்திற்கும் கட்டாயம் இடமுண்டு. கடந்த 1996 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் அஜித் -தேவயானி, ஹீரா நடித்த ’காதல் கோட்டை’ சூப்பர் ஹிட் அடித்ததோடு 250 நாட்களுக்குமேல் ஓடி சாதனையும் செய்தது. பார்க்காமலேயே காதல் கோட்டையை மனதிற்குள் கட்டி, அதனை உண்மையாக்குவார்கள் கமலியாக நடித்த தேவயானியும் சூர்யாவாக நடித்த அஜித்தும். அஜித் முன்னணி நடிகராக மாறியதற்கு ‘காதல் கோட்டை’க்கு முக்கிய பங்குண்டு.

’காலமெல்லாம் காதல் வாழ்க’, ‘சிவப்பு லோலாக்கு’, ‘நலம் நலம் அறிய ஆவல், ‘மொட்டு மொட்டு மலராத மொட்டு’ உள்ளிட்டப் தேவாவின் பாடல்களும் படத்திற்கு பலமாய் அமைந்தன. இயக்குநர் அகத்தியனுக்கு தேசிய விருது பெற்றுத்தந்தது. இப்படத்தை சிவசக்தி மூவி மேக்கர்ஸ் சார்பில் சிவசக்தி பாண்டியன் தயாரித்திருந்தார்.

image

இந்த வருடம் ‘காதல் கோட்டை’ படம் வெளியாகி 25 வது வருடம். இதனையொட்டி தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் பேசும்போது, “எல்லோரும் காதல் கோட்டைப் படத்திற்கு விழா எடுக்க வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், நான் டிஜிட்டல் முறையில் மீண்டும் ’காதல் கோட்டை’ படத்தை வெளியிட முயற்சி செய்து வருகிறேன். பிரம்மாண்ட முறையில் மீண்டும் வெளியாகும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3zaC41Z

No comments