Breaking News

இந்த வார ஓடிடி ரிலீஸ்: ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கும் 5 படங்கள்

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் ஓடிடியில் திரைப்படங்கள் வரிசை கட்டுகின்றன. ரசிகர்கள் எதிர்பார்ப்புக்குரிய சில திரைப்படங்கள் இந்த வாரம் வெளியாக இருக்கின்றன. அவற்றின் தொகுப்பு இதோ...

நாரப்பா (தெலுங்கு): வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' சூப்பர் ஹிட் அடித்ததோடு தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை குவித்தது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக் தான் 'நாரப்பா'வாக தயாராகி இருக்கிறது. இந்தப் படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷ், பிரியாமணி ஆகியோர் தனுஷ் மற்றும் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தெலுங்கின் ஹிட் இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் ஸ்ரீகாந்த் அடாலா இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். அமேசான் பிரைமில் செவ்வாய்க்கிழமை வெளியாக இருக்கிறது 'நாரப்பா'. முன்னதாக தியேட்டர் ரிலீஸ் என்று கூறப்பட்ட நிலையில், கொரோனா சூழ்நிலைகள் காரணமாக ஓடிடி தளத்தில் ரீலீஸ் செய்யப்படுகிறது.

Image

இக்காட் (Ikkat - கன்னடம்): நடிகர்கள் - நாகபுஷனா என் எஸ், பூமிகா ஷெட்டி, சுந்தர் வீணா; இயக்கம்: ஈஷாம் கான் மற்றும் ஹசீன் கான். அமேசான் பிரைமில் 21-ம் தேதி வெளியாக இருக்கும் கன்னட படம் இது. நகைசுவை - காதல் கலந்த படமாக இது உருவாகியுள்ளது. விவாகரத்து கோரிய ஒரு தம்பதியினர் கொரோனா தொற்றுநோய் காரணமாக விவாகரத்து கிடைக்காமல், ஒன்றாக சேர்ந்து வாழ இருப்பதை கருவாக வைத்து இந்தப் படம் தயாராகி இருக்கிறது.

சார்பட்டா பரம்பரை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள 'சார்பட்டா பரம்பரை' வரும் ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. 'காலா' வெற்றிக்குப் பிறகு, பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் என்பதால் 'சார்பட்டா பரம்பரை' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்த எதிர்பார்ப்பை கூட்டுவதாய் அமைந்தது சில தினங்கள் முன்பு வெளியான ட்ரெய்லர். தமிழக ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் இது. தெலுங்கு மொழியிலும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

image

14 PHERE (இந்தி): நடிகர்கள் - விக்ராந்த் மாஸ்ஸி, கீர்த்தி கார்ப்பனந்தா; இயக்கம்: தேவன்ஷு சிங். இரண்டு சமூகங்களை சேர்ந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அவர்களது குடும்பத்தினர் மனம் வருத்தப்படாமல் இதனை செய்ய வேண்டும். இதனை காமெடியாக சொல்ல வரும் படம்தான் இது. Zee5 தளத்தில் வரும் 23ம் தேதி வெளியாக இருக்கிறது.

ஹங்கமா 2 (Hungama 2 - இந்தி): பிரபல இயக்குநர் பிரியதர்சன் இயக்கத்தில் ஷில்பா ஷெட்டி, மீசான் ஜாஃப்ரி, பரேஷ் ராவல், பிரனிதா சுபாஷ் என இந்தி சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் படம் இது. 2003-ஆம் ஆண்டு வெற்றி பெற்ற "ஹங்காமா" படத்தின் அடுத்த பாகமாக உருவாகியிருக்கிறது. உண்மையில், 1994-ல் வெளியான மலையாள திரைப்படமான "மின்னாரம்" ரீமேக்தான் இந்த ஹங்காமா. தற்போது இந்தி சினிமாவில் மிகவும் எதிர்பார்க்குரிய படங்களில் ஒன்றாக 'ஹங்கமா 2' மாறியிருக்கிறது. மேலும் இந்தப் படத்துக்கு இன்னொரு ஸ்பெஷல், இந்தப் படத்தின் மூலமாக பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் திரையுலகுக்கு கம்பேக் கொடுக்கிறார். டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 23-ம் தேதி வெளியாகி பாலிவுட் ரசிகர்களுக்கு நகைசுவை விருந்து படைக்க இருக்கிறது 'ஹங்கமா 2'.

Hungama 2 Official Trailer | Shilpa Shetty, Paresh Rawal, Meezaan, Pranitha, Priyadarshan | July 23 - YouTube

இதுபோக, 'பீல்ஸ் லைக் இஷ்க்', 'மர்டர் இன் ஹில்ஸ்' போன்ற தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான தொழில்நுட்ப கலைஞர்களின் திரைப்படங்கள் பல இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/36N4fba

No comments