Breaking News

'ஹாரி பாட்டர் லூதியானா வெர்ஷ்ன்!' - கவனம் ஈர்க்கும் ஆயுஷ்மான் குரானாவின் புதிய லுக்

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவாக்கி வரும் 'டாக்டர் ஜி' படத்தின் ஸ்டில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ஆயுஷ்மான் குரானா. 'ஆர்ட்டிகிள் 15', 'அந்தாதூன்', 'பாலா' என பல முக்கிய படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் 'ஆர்டிகிள் 15' படம் இந்திய அளவில் கவனத்தையும் பாராட்டுக்களையும் குவித்தது. இந்த நிலையில், தற்போது 'டாக்டர் ஜி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு போபாலில் நடந்து வருகிறது. இதில் கலந்துகொண்டு நடித்து வரும் நிலையில் 'டாக்டர் ஜி' படத்தில் தனது லுக்கை தனது இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்தியுள்ளார்.

அவரின் புதிய தோற்றம் ரசிகர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது. படத்தில் அவரின் லுக் 'ஹாரி பாட்டர்' போல் இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமென்ட் அடித்து வருகின்றனர். இதற்கிடையே, படத்தில் அவரின் லுக் உடன் சேர்த்து ஷூட்டிங் ஸ்பாட் படங்களை கூடுதலாக வெளியிட்டுள்ளார். ''இந்த மொட்டை மாடி, இந்த மேகங்கள், மா மரங்கள், இவை அனைத்தும் குழந்தைப் பருவத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது. டாக்டர் ஜி படப்பிடிப்பு ஆரம்பாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

image

இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஷெபாலி ஷா ஆகியோர் முன்னணி நடிகைகளாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கின்றனர். அனுபூத்தி காஷ்யப் என்பவர் இயக்க, ஜங்லீ பிக்சர்ஸ் தயாரிக்கிறது. முன்னதாக இந்தப் படத்தில், தனது கேரக்டர் குறித்து ஆங்கில செய்தித் தளத்துக்கு பேசிய ஆயுஷ்மான் குரானா, 'டாக்டர் ஜி கதை எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக மாறியிருக்கிறது. லாக் டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக படப்பிடிப்புகள் தொடங்க தாமதமானது. நாங்கள் அனைவரும் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க காத்திருந்தோம். இறுதியாக அந்த நாள் வந்துவிட்டது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

Rakul Preet Singh to play Ayushmann Khurrana's leading lady in upcoming film 'Doctor G'

முதன்முறையாக ஒரு மருத்துவராக நடிப்பது அவர்களுக்கு செலுத்தும் மரியாதை. படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறியிருக்கிறார். 'டாக்டர் ஜி' படத்தை தவிர, ஆயுஷ்மான் குரானா தற்போது 'ஆர்ட்டிகிள் 15' இயக்குநர் உடன் 'அனெக்' என்ற படத்திலும், 'சண்டிகர் கரே ஆஷிகி' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3kyu5aQ

No comments