Breaking News

ஒலிம்பிக்: வில்வித்தை தரவரிசையில் 9-ஆவது இடத்தை பிடித்தார் தீபிகா குமாரி

டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை தனிநபருக்கான தரவரிசையில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 9 ஆவது இடத்தை பிடித்தார்.

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாளான இன்று நடைபெறும் தகுதிநிலை தரவரிசை சுற்றில் இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். வில்வித்தைப் போட்டிக்கான தகுதிநிலை சுற்று அதிகாலை ஐந்தரை மணிக்கு தொடங்கியது. இதில் தனிநபருக்கான மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி பங்கேற்றார். இதில் முதல் மூன்று இடத்தை கொரிய வீராங்கனைகள் பிடித்தனர்.

image

இதில் இந்தியாவின் தீபிகா குமார் 663 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தை பிடித்தார். முதல் இடத்தை பிடித்த தென் கொரியாவின் அன் சான் 680 புள்ளிகளை பெற்றார். கடந்த ரியோ ஒலிம்பிக்கில் தனிநபர் தகுதிப்பிரிவில் 20-ஆவது இடத்தை பிடித்த தீபிகா குமாரி, இம்முறை சிறப்பாக செயல்பட்டு பட்டியலில் 9 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3hWpnBV
via

No comments