Breaking News

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய தேசிய கொடியை ஏந்திச் செல்லும் மேரிகோம், மன்பிரீத் சிங்

ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்-வீராங்கனைகள், நிர்வாகிகள் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் தொடக்க விழா நிகழ்ச்சியில் தேசியக்கொடி ஏந்திச் செல்லவுள்ளனர். இவர்களுடன் குத்துச்சண்டை வீரர்களான சதிஷ் குமார், ஆஷிஷ் குமார், மணிஷ் கவுஷிக், அமித் பங்கல், வீராங்கனைகள் பூஜா ராணி, லவ்லீனா போர்ஹொகைன், சிம்ரன்ஜீத் கவுர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

image

நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பிரனதி நாயக், வாள்வித்தை வீராங்கனை பவானி தேவி, பாய்மரப்படகு வீரர்கள் வருண் அஷோக், விஷ்ணு சரவணன், கே.சி.கணபதி, வீராங்கனை நேத்ரா குமணன், டேபிள் டென்னிஸ் வீரர் வீராங்கனைகளான சரத் கமல், சத்யள், மனிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்களுடன் இந்திய ஒலிம்பிக் குழுத் தலைவர் பிரேந்தர் பிரசாத் பைஷ்யா, துணைத் தலைவர் பிரேம் வர்மா உள்ளிட்ட நிர்வாகிகள் 6 பேரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3x2kbAO
via

No comments