விக்கிரவாண்டி அருகே அரசுப் பள்ளி எதிரே இருக்கும் இடுகாடு விரைவில் மாற்றம்: வருவாய்த் துறையினர் தகவல்

விக்கிரவாண்டி அருகே அரசுப் பள்ளி எதிரே இருக்கும் இடுகாடு விரைவில் மாற்றப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
விக்கிரவாண்டி அருகே செ.குன்னத்தூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி அருகே கிராமத்திற்கு பொதுவான இடுகாடு உள்ளது. இக்கிராமத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பள்ளி வேலை நேரத்தில் எரிப்பதால் குமட்டும் வாடை பள்ளியை சூழ்ந்து கொள்கிறது. இதனால் வகுப்புகளின் ஜன்னல்களை மூடி பாடம் நடத்தியுள்ளனர். பள்ளி எதிரிலேயே இடுகாடு இருப்பதால் இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் படித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AwYZpB
via
No comments