ஒலிம்பிக் வில்வித்தை: தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டிக்கு இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் தீபிகா குமாரி தகுதிப் பெற்றார்.
ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான வில்வித்தையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபிகா குமாரியும் ரஷ்ய ஒலிம்பிக் கமி்ட்டியின் பெரோவா மோதினர். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-5 என்ற கணக்கில் தீபிகா குமாரி வெற்றிப்பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இதனையடுத்து காலிறுதிப் போட்டி இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3zQ477b
via
No comments