Breaking News

சசிகலா வெளியிட்டு வரும் ஆடியோ விவகாரம்; அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஓபிஎஸ், இபிஎஸ் இன்று ஆலோசனை: உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் பேசுகின்றனர்

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு அரசியலைவிட்டு ஒதுங்குவதாக கூறிய சசிகலா, தற்போது அதிமுகவை மீண்டும் கைப்பற்றப்போவதாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அதிமுகநிர்வாகிகளுடன் தொடர்ந்து போனில்பேசி வருகிறார். அந்த உரையாடல் ஆடியோவை தினந்தோறும் வெளியிட்டு வருகிறார். ஊரடங்கு முடிந்ததும் ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்துசுற்றுப்பயணத்தை தொடங்குவதாகவும் கூறி வருகிறார். அதேநேரத்தில், சசிகலாவுடன் பேசிய நிர்வாகிகள், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jVa8uF
via

No comments