தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற கல்லூரி மாணவனுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மாரி. அதே பகுதியில் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவரது மகன் மணிகண்டன் (19). சென்னையில் உள்ளதனியார் கலைக் கல்லூரியில் பயின்று வருகிறார்.
தமிழ் மண்ணின் பாரம்பரிய கலையான சிலம்பக்கலையில் அதிகம் ஈர்ப்புடைய மணிகண்டன் இன்டெர்னல் போர்ஸ் மார்ஷலார்ட்ஸ் அகாடமியில் 5 ஆண்டுகளாக பயிற்சிபெற்று வருகிறார். உள்ளூர் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி வந்த மணிகண்டன், கடந்த 17, 18, 19 ஆகிய தேதிகளில் கோவாவில் நடந்த தேசியஅளவிலான சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டார். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில் தங்கம் வென்றுசாதனை படைத்துள்ளார். பின்பு வீடு திரும்பிய மணிகண்டனுக்கு திருமுடிவாக்கம் கிராம மக்கள் ஆரத்தி எடுத்தும், பொன்னாடை, மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BA2ufp
via
No comments