Breaking News

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலின் பக்தர்கள் தங்கும் விடுதிக் கட்டிடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் நகரில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளது. மலை மீது சுயம்புமூர்த்தியாக சுவாமி வேதகிரீஸ்வரர் அருள்பாலிப்பதால், பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் மலையை கிரிவலம் வருகின்றனர்.

மேலும், கோயிலின் அடிவாரத்தில் அமைந்துள்ள கோயிலில் திரிபுரசுந்தரி அம்பாள் மற்றும் பக்தவச்சலேஸ்வரர் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலுக்கு, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், வெளியூர்களில் இருந்துவரும் பக்தர்கள் தங்கிச் செல்வதற்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ic7dev
via

No comments