Breaking News

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்: கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று சென்னையில் பட்டியலை வெளியிட்டார். அதன் விவரம்: சென்னை மாநகராட்சியில் திருவொற்றியூர் 4-வது வார்டு ஆர்.ஜெயராமன், ஆர்.கே.நகர் 41-வது வார்டு பா.விமலா, 148-வது வார்டு எஸ்.வெள்ளைச்சாமி, 123-வது வார்டு எம்.சரஸ்வதி, தாம்பரம் மாநகராட்சி 61-வது வார்டு ஆர்.விஜயா, 28-வது வார்டு ஜி.விஜயலட்சுமி, ஆவடி மாநகராட்சி 10-வது வார்டு அ.ஜான் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/R6BhDc7sL
via

No comments