Breaking News

வியாபாரிகள் போராட்டம் எதிரொலி நேதாஜி மார்க்கெட்டில் மொத்த காய்கறி வியாபாரத்துக்கு அனுமதி: வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் சுமூக முடிவு

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கக்கோரி காய்கறி மொத்த வியாபாரிகள் நேற்று வியாபாரத்தில் ஈடுபடாமல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நேதாஜி மார்க்கெட்டில் மொத்த வியாபாரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் தாக்கத் தால் நேதாஜி மார்க்கெட்டில் இயங்கிவந்த காய்கறி மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம், பூ மார்க்கெட், மளிகை கடைகள்,மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 650-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட் டன. மேலும், மாங்காய் மண்டி அருகில் உள்ள மைதானத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு காய்கறி மொத்த வியாபாரமும், பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் சில்லறை காய்கறி வியாபாரமும் நடைபெற்றது. ஊரடங்கு தளர்வில் நேதாஜி மார்க்கெட்டில் பிற கடைகள் திறக்கப்பட்ட நிலையில் காய்கறி மொத்த வியாபாரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AWgwba
via

No comments