நெல் கொள்முதல் தொகையை வழங்காததை கண்டித்து தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு பூட்டு: காவல் துறையினர் பேச்சுவார்த்தை

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கான பணத்தை வழங்காததைக் கண்டித்து தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு பூட்டுப் போட்டு விவ சாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாயிகள், நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்து கொடுத்துள்ளனர். இந்நிலையில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு கடந்த 3 மாதங்களாக நிர்வாகம் பணம் வழங்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் முறை யிட்டும் பலனில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3z0RoOA
via
No comments