Breaking News

தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 13-ம் தேதி தாக்கல்?- ஒப்புதல் தர இன்று அமைச்சரவை கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது

தமிழக பட்ஜெட் வரும் ஆக.13-ம் தேதி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், 2021-22ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை, புதிய தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் பேரவை பொதுத்தேர்தல் நடைபெறும் என பிப்ரவரி இறுதியில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, முந்தைய அதிமுக அரசு தனது இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது. தேர்தலில் வெற்றி பெற்று தற்போது திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த 2021-22ம் நிதியாண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தயாரித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fpzz4k
via

No comments