மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன்; ‘ஆன்லைன்’ மூலம் இனி பக்தர்களுக்கு ஆசி வழங்குவேன்: நித்தியானந்தா அறிவிப்பு

மதுரை ஆதீனத்தின் 293-வதுபீடாதிபதியாகப் பதவியேற்றுவிட்டேன். ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளேன், என்று தனது முகநூல் பக்கத்தில் கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளார் நித்தியானந்தா.
மதுரை ஆதீனத்தின் 292-வது மகா சன்னிதானமாக ல அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் இருந்து வந்தார். இவரது காலத்துக்கு முன்பு மதுரை ஆதீனத்தின் கோடிக்கணக்கான சொத்துகள் பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. அந்த சொத்துகள் அனைத்தையும் மீட்டு மடத்தின் வருவாயை அருணகிரிநாதர் பெருக்கினார். ஆதீன நிர்வாகப் பொறுப்பு மட்டுமில்லாது, ஆதீனத்தின் நோக்கமான சைவ சமய வழிபாட்டை பரப்புவதையும், தமிழ் வளர்ச்சிக்காகவும் சிறப்பாகத் தொண்டாற்றி வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gh5DYK
via
No comments