Breaking News

கும்பகோணம் நிதி நிறுவன அதிபர்கள் மீது ரூ.30 கோடி மோசடி செய்ததாக 35 வழக்கு பதிவு: தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ்குமார் தகவல்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ்,எம்.ஆர்.சுவாமிநாதன். ‘ஹெலிகாப்டர் சகோதரர்கள்’ என அழைக்கப்பட்ட இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இவர்களின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தபல கோடி ரூபாய் பணத்தை திருப்பி வழங்காமல் மோசடி செய்துவிட்டதாக பலபேர் தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவுபோலீஸார் வழக்குப் பதிவு செய்து, எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன் உட்பட 7 பேரை கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CORBqU
via

No comments