Breaking News

முதல் தடுப்பூசி போட்டபிறகும் நெல்லையில் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 4 பேருக்கு கரோனா தொற்று: 400 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள முடிவு

பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 4 பேருக்கு கரோனாபாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இங்குள்ள 400 மாணவ - மாணவியருக்கு பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கு தளர்வுகளை அடுத்து, கடந்த16-ம் தேதி முதல் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக மாணவ - மாணவியருக்கான விடுதிகளும் திறக்கப்பட்டன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38jIjoB
via

No comments