சிறுமியை ஏமாற்றி 5-வது திருமணம்
கும்பகோணம்: மதுரை மாவட்டம், மகபூபாளையத்தைச் சேர்ந்த சையத் அலி(40), கும்பகோணத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, உடன் பணிபுரிந்த 17 வயது சிறுமியை கடந்த ஜன.12-ல் கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. போலீஸார் சையத் அலியை கடந்த 7 மாதங்களாக தேடிவந்தனர்.
இந்நிலையில், நாச்சியார்கோவிலில் நேற்று முன்தினம் சையத் அலியை போலீஸார் பிடித்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். சிறுமியை பெற்றோருடன் அனுப்பிவைத்தனர். விசாரணையில், சையத் அலி பெங்களூரு, மதுரையில் தலா ஒரு பெண்ணையும், கும்பகோணத்தில் 2 பெண்களையும் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு, பணம் மற்றும் நகையை சுருட்டிக்கொண்டு கைவிட்டதும், தற்போது 5-வதாக இந்தச் சிறுமியை திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3szhoyk
via
No comments