இது வேற மாரி லெவல்: 'வலிமை' படத்தின் ‘நாங்க வேற மாரி’ பாடல் ரிலீஸ்
’வலிமை’ படத்தின் ’நாங்க வேற மாரி’ பாடல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ள, இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
’தீனா’, ’பில்லா’, ’ஏகன்’, ‘பில்லா 2’, ’மங்காத்தா’, ‘ஆரம்பம்’, ‘நேர்கொண்ட பார்வை’ என அஜித், யுவன் கூட்டணி எப்போதும் ரசிகர்களுக்கு சூப்பர் ஹிட் கூட்டணியாக அமைந்துள்ளது என்பதால் ’வலிமை’ படத்தின் பாடல்களுக்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. சமீபத்தில், வெளியான ’வலிமை’ மோஷன் போஸ்டர் டீசரின் பிஜிஎம்மும் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது, ‘நாங்க வேற மாரி’ பாடல் வெளியாகி அஜித் -யுவன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் இருக்கும் ’வலிமை’ பட அப்டேட்டுகளை எதிர்பார்த்து வலியோடு காத்திருந்த ரசிகர்களை, விக்னேஷ் சிவனின் ’நாங்க வேற மாரி.. வேற மாரி.. வேற மாரி’ என வேற லெவல் வரிகளும் யுவனின் வேற மாரி இசையும் குரலும் வலிமைப்படுத்தியிருக்கின்றன.
திருவிழாவில் அஜித்தின் அறிமுகப் பாடலாக அமைந்துள்ள, இப்பாடல் ரசிகர்களுக்கு பெருவிழாவாக அமைந்திருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் மட்டுமல்லாமல், ’தெருக்குரல்’ அறிவு, தாமரை, உள்ளிட்ட பலரும் வலிமை படத்திற்காக பாடல் எழுதியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3jehkjB
No comments