Breaking News

மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமிக்கு பட்டாபிஷேகம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் 7ம் நாளான நேற்றிரவு சுவாமிக்கு பட்டா பிஷேகம் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூல உற்சவத் திருவிழா ஆக.5-ம் தேதி தொடங்கியது. 7ம் நாளான நேற்று காலையில் வளையல் விற்ற லீலை நடைபெற்றது. இரவு சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் நடைபெற்றது. அப்போது சுவாமியிடமிருந்து செங்கோலை பெற்ற தக்கார் கருமுத்து தி. கண்ணன் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தை வலம் வந்து பின்னர் அந்த செங்கோலை சுவாமியின் திருக்கரத்தில் ஒப்படைத்தார். எட்டு மாதத்துக்கு சுந்தரேசுவரரின் ஆட்சி நடக்கும் என்பது ஐதீகம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UwWR16
via

No comments