Breaking News

"நடிகர் சிம்புவின் வளர்ச்சி பொறுக்காமல் சதி" - உஷா ராஜேந்தர் குற்றச்சாட்டு

நடிகர் சிம்புவின் வளர்ச்சியை பொறுக்காமல் சிலர் சதி செய்வதாக அவரது தாயார் உஷா ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.

அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்தில் நடிகர் சிம்பு முழுமையாக நடித்துக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருப்பதால், தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு விதித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து சிம்பு தரப்பில் அவரது தாயார் உஷா ராஜேந்தர், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உஷா ராஜேந்தர், சிம்பு - மைக்கேல் ராயப்பன் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டப் பஞ்சாயத்து செய்யக் கூடாது எனவும், திட்டமிட்டபடி 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3j8vu6I

No comments