திமுக அரசின் நூறு நாள் ஆட்சி தோல்வி: ஹெச்.ராஜா
திமுக அரசின் நூறு நாள் ஆட்சி தோல்வியை சந்தித்துள்ளது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பரமக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து 90 நாட்களில் ரூ.40,000 கோடி கடன் வாங்கியுள்ளது. பட்ஜெட்டில் ரூ.58,000 கோடி பற்றாக்குறையாகத் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இது பண வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் விலைவாசி உயரும். வெள்ளை அறிக்கையில் அடுத்த 6 மாதங்களில் ரூ.92,000 கோடி கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sEGGeG
via
No comments