Breaking News

கோடநாடு வழக்கில் தொடர்பு இல்லாவிட்டால் இபிஎஸ், ஓபிஎஸ் அச்சப்படத் தேவையில்லை: விசிக தலைவர் திருமாவளவன் கருத்து

கோடநாடு வழக்கில் தொடர்பு இல்லாவிட்டால் முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அச்சப்படத் தேவையில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்தார்.

திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும்மக்களவைத் தேர்தலுக்குள் வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க வேண்டியது அவசியம். சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் 5 மாநில முதல்வர்கள், 21 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றது, அதற்கு அடித்தளம் அமைப்பதாக உள்ளது.பாமக நிறுவனர் ராமதாஸ் விடுதலை சிறுத்தைகள் குறித்து நல்லவிதமாக கருத்து கூறியதை வரவேற்கிறேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Wj3pB2
via

No comments