Breaking News

தமிழகத்தில் மழை வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைபெய்யக்கூடும். 5, 6-ம் தேதிகளில்நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய ஒருசில உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு இலங்கைபகுதிகளில் வரும் 7-ம் தேதி வரைபலத்த காற்று வீசக்கூடும் எனவானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xod466
via

No comments